கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,007 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியும் சராசரி வளர்ச்சியில் 40% சரிவு காணப்படுகிறது. இந்தியாவில் கரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும், இறப்புகளுக்கும் இடையிலான விகிதம் 80:20 ஆக உள்ளது.
5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். கரோனாவை எதிர்த்து போரிட பி.சி.ஜி, பிளாஸ்மா சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் ஆகியவற்றில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் 3 நாள்களில் கரோனா பாதிப்பு இரட்டிப்பான நிலையில், கடந்த 7 நாட்களின் தரவின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. 19 மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் கரோனாவைத் தடுப்பதில் கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


