தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கேரள நபருக்கு 29-வது நாளில் உறுதியான கரோனா தொற்று: குழப்பத்தில் மருத்துவர்கள்

ஒருவருக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டால் அவர் அதிகபட்சமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 6:49 am


ஒருவருக்கு கரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டால் அவர் அதிகபட்சமாக 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். 28 நாட்களில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், அவர் கரோனா பாதிப்பு இல்லாதவர் என்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்.

ஆனால், 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது சரியானதுதானா? என்று கேட்டால் இல்லை என்பதே தற்போதைய பதிலாகக் கிடைத்துள்ளது.

துபையில் இருந்து திரும்பிய கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 29வது நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற விதிவிலக்கான சில கரோனா தொற்று பாதிப்புகளால், மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். துபையில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள எடசேரி பகுதியில் தங்களது வீட்டுக்கு வந்த இரண்டு சகோதரர்களில் ஒருவர்தான் தற்போது 29வது நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டவர். இவர்கள் வீட்டில் இருந்து நேராக தனிமைப்படுத்தும் மையத்துக்குச் சென்றுவிட்டனர்.

ஆனால், இவர்களது 67 வயது தந்தை, உடல் நலப் பிரச்சினையால் மருதுவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஏப்ரல் 11-ம் தேதி அவருக்குக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி, பேரப்பிள்ளை, ஒரு மகனுக்கும் கரோனா உறுதியானது. மறறொரு மகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா சோதனை செய்யப்பட்டு வந்ததில், 29வது நாளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எடசேரி நபருக்கு கரோனா பாதிப்பு மிக வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதன் மூலம், 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகும், ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

எனவே, 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீடு திரும்பும் நபர்கள், மேலும் ஒரு வாரம் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.