கரோனா சேவை புரியும் பணியாளர்களுக்கு கவனஈர்ப்புச் சித்திரம் மூலமாக நன்றி தெரிவிக்கும் கூகுள்!

கரோனாவுக்கு எதிராகப் போரிடும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் கவனஈர்ப்புச் சித்திரங்களை (டூடுல்) வெளியிட்டு வருகிறது. 
கரோனா சேவை புரியும் பணியாளர்களுக்கு  கவனஈர்ப்புச் சித்திரம் மூலமாக நன்றி தெரிவிக்கும் கூகுள்!

உலகமெங்கும் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் கடந்த ஒரு வாரமாக தனது முகப்புப் பக்கத்தில் கவனஈர்ப்புச் சித்திரங்களை (டூடுல்) வெளியிட்டு வருகிறது. 

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போரிட்டு மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அவசர சேவை புரிவோர், காவல்துறையினர், விவசாயிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்போர், அறிவியல் ஆய்வாளர்கள் என தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் பணியாற்றுவோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூகுள் தனித்தனியே கவனஈர்ப்புச் சித்திரங்களை வெளியிட்டது. தொடர்ந்து, அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே நேரத்தில் நன்றி தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு கவனஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com