தில்லியில் பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டது. ஏப்ரல் 16 ஆம் தேதி குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மருத்துவமனையில் சமீபத்தில் கரோனா தொற்று உறுதியான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் முன்னதாக இந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்துள்ளது. இதே மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்த மற்றொரு குழந்தைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் கரோனா தொற்றுக்கு ஆளாவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


