கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 36 இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது 17,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 543 ஆக உள்ளது. 2,546 பேர் (14.75%) குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
தென் கொரியாவில் இருந்து 5 லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் விரைவில் வரவுள்ளன. கரோனா வைரஸ் இரட்டிப்பு விகிதம் ஊரடங்கிற்கு முன் 3.5 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 7.5 நாட்களாக உயர்ந்துள்ளது. பாதிப்பு இரட்டிப்பாக 7.5 நாட்கள் ஆகிறது. இதன் மூலமாக கரோனா பரவல் குறைந்துள்ளது தெரிகிறது.
அதேநேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஒருநாளில் இதுவே அதிக பாதிப்பாகும்.
கேரளம், ஒடிசா, கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கோவாவில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை' என்று தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத் துறை இணைச் செயலாளர் புன்யா சலிலா கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


