இந்தியாவின் பாதி பகுதிகளில் கரோனாவின் சுவடே இல்லை

இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பாதி பகுதிகளில் கரோனாவின் சுவடே இல்லை


புது தில்லி: இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஒரு ஆறுதல் தரும் செய்தியாக, இந்தியாவின் பாதி பகுதிகளில் இதுவரை ஒரு கரோனா பாதிப்புக் கூட உறுதி செய்யப்படவில்லை என்பதுதான்.

அதாவது, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 736 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஏப்ரல் 19ம் தேதி நிலவரப்படி 325 மாவட்டங்களில் ஒரு கரோனா நோயாளி கூட இல்லை. அதாவது 46% மாவட்டங்கள் கரோனாவின் சுவடே இல்லாமல் இருக்கின்றன என்பதுதான்.

குறிப்பாக 18 மாவட்டங்கள்தான் கடுமையான பாதிப்பைக் கொண்டுள்ளன. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்றவை அரசுகளுக்கு மிக எளிதான பணியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 411 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளைக் கொண்டதாக 18 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிலும், மாநிலங்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் மும்பை (மகாராஷ்டிரம்), இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஹைதராபாத் (தெலங்கானம்), கொர்பா (சட்டீஸ்கர்), ராஞ்சி (ஜார்க்கண்ட்) மற்றும் குர்தா (ஒடிசா) ஆகிய மாவட்டங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com