

கொழும்பு: இலங்கையின் 126 ஆண்டு காலப் பழமை கொண்ட கொழும்பு தேயிலை ஏலம், கரோனா தொற்று காரணமாக ஆன்லைனுக்கு மாறியுள்ளது.
ஏப்ரல் 4 - 19ம் தேதி வரை இலங்கையில் மின்னணு முறையில் நடத்தப்பட்ட ஏலத்தில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் கிலோ எடை கொண்ட தேயிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், ஏலத்தை நடத்த முடியாத நிலையில், மின்னணு முறையில் ஏலம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் 300 வியாபாரிகள், 8 தேயிலை தரகர்கள் பங்கேற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.