
திருப்பதி: ஆந்திரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நில அதிா்வு காரணமாக மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பீலேரு மண்டலம், குர்ரம்கொண்ட பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இதையடுத்து, மக்கள் அச்சத்தில் வீடுகளைவிட்டு வெளியேறினா். தொடா்ந்து 25 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் நில அதிா்வு உணரப்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களும் அலறி அடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கி இருந்த மக்களுக்கு, இந்த நிலஅதிா்வு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியது. நில அதிா்வு குறித்து அரசு தரப்பில் விபரம் எதுவும் கிடைக்கவில்லை.