ராஜஸ்தானில் விரைவு பரிசோதனைக் கருவிகள் பயன்பாடு நிறுத்தம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பரிசோதனையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகள் உபயோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் விரைவு பரிசோதனைக் கருவிகள் பயன்பாடு நிறுத்தம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பரிசோதனையில் 'ரேபிட் டெஸ்ட் கிட்' எனப்படும் விரைவு பரிசோதனை கருவிகள் உபயோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டவரின் மாதிரிகள், விரைவு பரிசோதனைக் கருவிகள் மூலமாக சோதனை செய்யும்போது பெரும்பாலான முடிவுகள் தவறாக வந்ததால் சோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா இதுகுறித்து, 'விரைவு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தும்போது வெறும் ஐந்து சதவிகிதம்  மாதிரிகளில் மட்டுமே சரியான முடிவுகள் கிடைக்கின்றன. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இதுவரை கரோனாவால் 1,628 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com