

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்ததை அடுத்து நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 15,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 3870 பேர் குணமடைந்துள்ளனர். நோய் பாத்தித்தோரில் 77 பேர் வெளிநாட்டினர்.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1383 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,984 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 போ் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 603-இல் இருந்து 640 -ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 617 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,260-இல் இருந்து 3,870 -ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக கரோனா நோய்த்தொற்றால் மகாராஷ்டிரத்தில் புதிதாக 549 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,669-இல் இருந்து 5218 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத்தில் 2178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய தலைநகர் தில்லியில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2156 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் 1659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 25 பேர் உயிரிழந்துள்ளனர், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 1596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 18 பேர் உயிரிழந்துள்ளனர், மத்தியப் பிரதேசத்தில் 1552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 76 உயிரிழந்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் 7 பேரும், மணிப்பூரில் 2 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் குணமடைந்துவிட்டனா். அந்த இரு மாநிலங்களிலும், நாகாலாந்திலும் தற்போது கரோனா நோயாளிகள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.