இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா; 771 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 771 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா; 771 பேர் பலி
இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா; 771 பேர் பலி


இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 771 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 18 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து 5,79,357 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 11,86,203 பேர் குணமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 52,972 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 771 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 38,135-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நோய்த்தொற்றுக்காக 5,79,357 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,86,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,41,228  பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு 15,576 பேர் பலியாகியுள்ளனர்,  1,48,843 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 2- ஆம் தேதி வரை 2,02,02,858 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,81,027 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பாதிப்பு:  18,03,696
பலி: 38,135
குணமடைந்தோர்: 11,86,203
சிகிச்சை பெற்று வருவோா்: 5,79,357
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com