விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கரோனா; மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில், நிகழ்ந்த விமான விபத்தில் மரணம் அடைந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விபத்து நடந்த போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கரோனா; மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல்
விமான விபத்தில் உயிரிழந்த பயணிக்கு கரோனா; மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு சிக்கல்


கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில், நிகழ்ந்த விமான விபத்தில் மரணம் அடைந்த பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விபத்து நடந்த போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் வந்த பயணிகள் பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

 கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கிய ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. பள்ளமான பகுதிக்குள் சரிந்ததால் விமான இரண்டாக உடைந்தது. 

இது குறித்து கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹைலஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, விமான நிலையத்தில் நேரிட்ட விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதோடு அவர்கள் அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள், விமான நிலைய ஊழியர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் இன்னுயிரை மீட்கும் போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற முடியாமல் போனது, தற்போது விமான நிலையப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது பாதுகாப்பையும், சமுதாயப் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அனைவருக்குமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அனைவரும் இன்றே சுகாதாரப் பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதே சமயம், விமானத்தில் வந்த 40 பயணிகளுக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com