தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் கெஜ்ரிவால்

தில்லியில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதால், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுதில்லி: தில்லியில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவதால், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி அம்பேத்கர் நகரில் 200 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக் கிழமை) திறந்து வைத்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்ஸிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பெரிய மருத்துவமனை இல்லை. இந்த மருத்துவமனையில் உள்ள 200 படுக்கைகளும் கரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படும். எல்லா படுக்கைகளுடனும் ஆக்ஸிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளதால், 200 படுக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இல்லையென்னால் இந்த மருத்துவமனையில் 600 படுக்கைகள் வைக்க முடியும்.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகளும் மக்களுக்கு தேவையில்லை. எனினும் நோயை கட்டுப்படுத்துவதற்கு நாம் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும். தில்லியில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது இவ்வாறு முதல்வர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com