பெங்களூரு வன்முறை: இந்துக் கோவிலைப் பாதுகாக்க மனித சங்கிலியான இஸ்லாமியர்கள்

கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருந்து இந்துக் கோயிலைக் காக்க இஸ்லாமிய இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித சங்கிலியாக நின்ற இஸ்லாமியர்கள்
மனித சங்கிலியாக நின்ற இஸ்லாமியர்கள்

கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருந்து இந்துக் கோயிலைக் காக்க இஸ்லாமிய இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அகந்த சீனிவாஸ் மூர்த்தி. இவரின் உறவினர் நவின் என்பவர் முகநூலில் குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து அவதூறாக கருத்துப் பதிவிட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரின் இல்லைத்தை முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டம் திடீரென வன்முறையாக வெடித்தது. அகந்த சீனிவாஸ் மூர்த்தியின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகந்த மூர்த்தியின் வீட்டின் மீது கற்களை வீசினர். தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.வன்முறை கட்டுக்குள் வராத நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்ட நவீன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது பெங்களூரு நகரின் கிழக்குப் பகுதியில் பைராசந்திராவில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு இந்து கோயிலுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்க முஸ்லிம் இளைஞர்கள் குழு ஒன்று ஒற்றுமையுடன் செயல்பட்டு மனித சங்கிலியாக நின்றது. பைராசந்திராவில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவத்தின் காணொலிகள் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com