

குஜராத்தில் தனியார் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சோட்டாடேபூர் மாவட்டத்தின் போடெலி நகரில் ஒரு மருத்துவமனையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றியதை அறிந்த நிர்வாகம் உடனடியாக இரண்டாவது தளத்தில் இருந்த கரோனா நோயாளிகளை முதல் தளத்துக்கு மாற்றியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இரண்டாம் தளத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 கரோனா நோயாளிகள் கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வார்டில் சுவிட்ச் போர்டில் இன்று காலை மின்கசிவு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புக் கருவி கொண்டு தீ அணைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நோயாளிகள் கீழ் தளத்திற்கு மாற்றப்பட்டனர் என்று தலைமை மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் மகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.