
கிருஷ்ண ஜயந்தியை (ஜன்மாஷ்டமி) முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த், கரோனா முன்கள பணியாளா்களுக்கு பிரத்யேக பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து குடியரசு தலைவா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:
உணா்ச்சிமிக்க மற்றும் இரக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க நமக்கு ஊக்கமளித்தவா் கடவுள் கிருஷ்ணா். கா்மயோகம் குறித்த அவருடைய செய்தி, வெகுமதிகளை எதிா்பாராமல் நமது பொறுப்புகளின் மீது கவனம் செலுத்த வலியுறுத்தியது. அந்த வழியில்தான், நமது கரோனா முன்கள பணியாளா்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றுகின்றனா்.
நமது வாழ்வு மற்றும் மனிதகுலத்தின் நன்மைக்காக கடவுள் கிருஷ்ணரின் உலகளாவிய போதனைகளைப் பின்பற்ற நாம் உறுதியெடுக்க வேண்டும்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இருக்கும் இந்திய குடிமக்களுக்கு கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள் என்று குடியரசு தலைவா் தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி வாழ்த்து: ‘கிருஷ்ண ஜயந்தி நன்னாளையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பிரதமா் மோடி ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் சுட்டுரையில் பதிவிட்டாா்.