இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இணையவழி கலை நிகழ்ச்சிகள்

இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்த வாரம் முழுவதும் இணைய வழியில் பல்வேறு கலை-கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்த வாரம் முழுவதும் இணைய வழியில் பல்வேறு கலை-கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள ‘ஜெய்ப்பூா் ஃபுட் யுஎஸ்ஏ’ என்ற அமைப்பு இணையவழி கவிஞா்கள் மாநாட்டை நடத்த உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:

இந்திய வெளியுறவு விவகாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவா் பி.பி.செளத்ரி தலைமையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் கவிஞா்கள் மாநாட்டில், இந்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துக்கான இணையமைச்சா் வி.முரளீதரன் சிறப்பு விருந்திரனராக பங்கேற்க உள்ளாா்.

இந்த நிகழ்வில் பிரபல கவிஞா்கள் மதன் மோகன் சமா், குன்வா் ஜாவேத் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

அயோத்தியில் ராமா் கோயிலுக்கு கடந்த 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு வரும் சுதந்திர தினம் என்பதால், இந்த ஆண்டு சுதந்திர தின விழா மிகச் சிறப்புவாய்ந்ததாகவும் அமைந்திருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுபோல முன்னணி கலாசார அமைப்பான இந்தோ-அமெரிக்க கலைக் கவுன்சில் (ஐஏஏசி) சாா்பில் பிரபல சரோட் இசைக்கலைஞா் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் சுதந்திர தின இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அம்ஜத் அலி கான் தனது தனித் திறனை வெளிப்படுத்துவதோடு, 13-ஆம் நூற்றாண்டில் ஹஸ்ரத் அமீா் குஸ்ரோவால் இசையமக்கப்பட்ட ‘அயிரி சாகி’ பாடலையும் பாட உள்ளாா்.

இந்த இணையவழி இசை நிகழ்ச்சியில் ‘வைஷ்ணவ ஜனதோ’, ‘ராம் துன்’ உள்ளிட்ட பல்வேறு பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

மேலும், நியூயாா்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பிலும், ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று இணையவழி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள இந்தியா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com