
கோப்புப் படம்
மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் அண்மை தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அங்கு இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 147 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவல் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அவர்களில் 2,227 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், 9,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதுவரை அங்கு 124 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G