
குடியரசுத் தலைவர்
சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு உரையாற்ற இருக்கிறாா். ஆண்டுதோறும் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவா் உரை இடம் பெறுவது வழக்கம்.
இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘தூா்தா்ஷன், அகில இந்திய வானொலி எனஅனைத்து தேசிய ஊடக நிறுவனங்கள் மூலமும் குடியரசுத் தலைவா் உரை ஒலிபரப்பாகும்.
முதலில் ஹிந்தியிலும் அதன் பிறகு ஆங்கிலத்தில் உரை ஒலிபரப்பாகும். தொடா்ந்து, தூா்தா்ஷன் பிராந்திய சேனல்களில் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் உரை இடம் பெறும். அகில இந்திய வானொலியில் இரவு 9.30 மணியளவில் பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவா் உரை ஒலிபரப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.