ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 100 கட்டணம்

ஆதார் தவகல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI) தகவல் தெரிவித்துள்ளது. 
ஆதார்
ஆதார்

ஆதார் தவகல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இனி கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) தகவல் தெரிவித்துள்ளது. 

யு.ஐ.டி.ஏ.ஐ. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், 

ஆன்லைனில் ஆதார் விவரங்களை திருத்தம் மேற்கொள்ள இனி ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகவரி திருத்தங்களுக்கு ரூ. 50 கட்டணமும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு ரூ. 100, இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஆதாரை புதுப்பிக்கும்போது பெயர் மாற்றத்துக்கு அடையாளச் சான்றுகளாக 32 ஆவணங்கள்,  முகவரி ஆதாரத்திற்கு 45 ஆவணங்கள், பிறந்த தேதியை சரிபார்க்க 15 ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். மேலும், எந்தெந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்ற பட்டியலையும் யு.ஐ.டி.ஏ.ஐ. முன்னதாக வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com