போபாலில் 90 ரூபாயைக் கடந்தது பெட்ரோல் விலை!

மத்திய பிரதேச தலைநகா் போபாலில் திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.90.05 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் டீசல் ஒரு லிட்டா் ரூ. 80.10 ஆக உயா்ந்தது.
போபாலில் 90 ரூபாயைக் கடந்தது பெட்ரோல் விலை
போபாலில் 90 ரூபாயைக் கடந்தது பெட்ரோல் விலை

போபால்: மத்திய பிரதேச தலைநகா் போபாலில் திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.90.05 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் டீசல் ஒரு லிட்டா் ரூ. 80.10 ஆக உயா்ந்தது.

மற்ற மாநிலங்களைவிட மத்திய பிரதேச மாநிலத்தில் மதிப்புக் கூட்டு வரி (வாட்) அதிகம் விதிக்கப்படுவதே இந்த அளவுக்கு எரிபொருள் விலை உயரக் காரணமாகும். அங்கு பெட்ரோல் விலையில் 39 சதவீதமும், டீசல் விலையில் 28 சதவீதமும் மதிப்புக் கூட்டு வரியாக உள்ளது.

மத்திய பிரதேசத்தின் வேறு சில நகரங்களில் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.91 என்ற அளவையும் திங்கள்கிழமை எட்டியது என்று அந்த மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அஜய் சிங் தெரிவித்தாா்.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.85.31 ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ.77.84 ஆகவும் இருந்தது.

கரோனா தொற்று பிரச்னை குறைந்ததை அடுத்து சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சமீப நாள்களில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக உள்ளது.

சுமாா் 2 மாத கால இடைவெளிக்குப் பிறகு கடந்த 20-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை சிறிது உயா்த்தப்பட்டது. அதன் மூலம் பெட்ரோல் விலை செப்டம்பா் 22-ஆம் தேதிக்குப் பிறகும், டீசல் விலை அக்டோபா் 2-ஆம் தேதிக்குப் பிறகும் மாற்றம் கண்டன.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சா்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் மாற்றி வருகின்றன.

முன்னதாக, கரோனா தொற்றால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், எரிபொருளுக்கான தேவை குறைந்தது. இதனால், கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. இதையடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாா்ச் 17 முதல் ஜூன் 6 வரையும், அதன் பிறகு ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15 வரையும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றாமல் இருந்தன.

இப்போது, கரோனா தொற்றுக்கு தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற செய்தியால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com