
கோப்புப்படம்
முசாபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகேயுள்ள மோர்னா பகுதியில் திருமண நிகழ்விற்காகச் சென்ற 12 வயது சிறுமியிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியைக் கடத்திச் சென்று அப்பகுதியிலிருந்த கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்போது சிறுமி கூச்சலிட்டதில் அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து குற்றவாளியைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...