
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 1.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
26,710 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 26,710 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,444 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
நாள்தோறும் இணையதளம் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். வைகுண்ட ஏகாதசிக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதியை தேவஸ்தானம் விரைவில் அறிவிக்க உள்ளது.
தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச் சாலையானது அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போருக்கு தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...