
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில், மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் (டிடிசி) அப்னி கட்சியின் வேட்பாளா் காயமடைந்தாா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் சிலா், வேட்பாளா் அனீசுல் இஸ்லாம் கனாயை வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனா். இதில், காயமடைந்த அனீசுல் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அனீசுல் இஸ்லாம், ஏற்கெனவே பாதுகாப்பு கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.
என்றாா் அவா்.