
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்
2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டப்பேரவை இடங்களுக்கான இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “உத்தரபிரதேசத்தில் இருந்து மக்கள் ஏன் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்காக டெல்லிக்கு வர வேண்டும்? அவர்கள் ஏன் தங்கள் சொந்த மாநிலத்தில் அதைப் பெற முடிவதில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகத் தெரிவித்த கேஜரிவால் தில்லியில் வசிக்கும் உத்தரப்பிரதேச மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் தில்லி அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை விரும்புவதாகத் தெரிவித்தார்.