
கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 5,218 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"மாநிலத்தில் புதிதாக 5,218 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.24 சதவிகிதமாக உள்ளது. கரோனா காரணமாக மேலும் 33 பேர் பலியாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,680 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 4,478 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 662 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் 5,066 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,16,666 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57,757 இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்."