
கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 3,442 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,86,807 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 48,339 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் 4,395 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 17,66,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி அங்கு 71,356 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
மும்பை:
மும்பையில் மேலும் 521 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,91,634 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மொத்தம் 10,991 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.