காங்கிரஸுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை: பிரகலாத் ஜோஷி

காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என கர்நாடக சட்டமேலவையில் ஏற்பட்ட அமளி தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என கர்நாடக சட்டமேலவையில் ஏற்பட்ட அமளி தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்தது:

"சட்ட மேலவை துணைத் தலைவர் வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்டது தெரிகிறது. காங்கிரஸுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. தற்போதைய சட்ட மேலவைத் தலைவர் ஜனநாயகத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராக எங்களது கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. சட்ட மேலவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அவர் இருக்கையில் அமரக் கூடாது. ஆனால், அவர் இருக்கையில் அமர முயற்சித்தார்.

துணைத் தலைவரே கூட்டத்தை வழிநடத்த வேண்டும் என பெரும்பாலானோர் விரும்பினர். ஆனால், அவர் காங்கிரஸ் உறுப்பினர்களால் வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்டார்.

இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com