
கோப்புப்படம்
தெலங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் பி.அஜய் குமாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் குமார் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தெலங்கானாவில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 491 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு 2.78 லட்சமாக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றுக்குப் புதிதாக 3 பேர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,499 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட 7,272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கள்கிழமை மட்டும் 48,005 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 62,05 லட்சம் பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோர் விகிதம் 96.85 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 0.53 ஆக உள்ளது.