
திருச்சி இனிப்பு கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
கர்நாடகத்தின், மங்களூரு தாலுகாவில் உள்ள கல்லாப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்து மூவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது.
மனைவி மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்த பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. கடந்த இரண்டு நாள்களாக வெளியில் வராததையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஜன்னலைத் திறந்து பார்க்கையில் மூவரும் உள்ளே இறந்து கிடந்துள்ளனார். இதையடுத்து காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டது.
மும்பையில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வினோத், ஓராண்டுக்கு முன்னர் தனது சொந்த ஊரான கல்லாப்பில் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.