பேச்சுவார்த்தைக்குத் தயார்; திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: விவசாயிகள்

​மத்திய அரசு அர்த்தமற்ற திருத்தங்களைக் கொண்டுவரக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்குத் தயார்; திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: விவசாயிகள்


மத்திய அரசு அர்த்தமற்ற திருத்தங்களைக் கொண்டுவரக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

போராடும் விவசாயிகள் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது விவசாயத் தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், "நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். அதற்கு, உறுதியான ஒரு முன்மொழிவுடன் அரசு வர வேண்டும்" என்றார்.

விவசாயத் தலைவர் ஷிவ் குமார் தெரிவிக்கையில், "சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்" என்றார்.

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் பேசுகையில், "அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் தயாராக உள்ளன. அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகளை சோர்வடைய வைக்க அரசு நினைக்கிறது என மற்றொரு விவசாயத் தலைவர் தெரிவித்தார்.

விவரம்:

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளர்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈர்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டங்களால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய நடைமுறை ரத்து ஆவதாகவும், எனவே இந்த புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com