
தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.83 லட்சமாக உயர்வு
தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது,
தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 574 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,83,556 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக இருவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,524 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 384 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,75,217 ஆக உள்ளது. இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 97.05 ஆக உள்ளது.
6,815 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 4,487 பேர் வீடு மற்றும் தனியார் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் 44,516 கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...