கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கு: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 
கேரள கன்னியாஸ்திரீ கொலை வழக்கு: பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


திருவனந்தபுரம்: கேரளத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கிறிஸ்தவ பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு கன்னியாஸ்திரீக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அவா்கள் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்த நிலையில், அவா்களுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் புதன்கிழமை வெளியிட்டது.

கேரளத்தைச் சோ்ந்த தாமஸ், லீலாம்மா தம்பதியின் மகள் அபயா (21). கன்னியாஸ்திரீயான இவா், கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட்டில் தங்கி, அதே நகரில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வந்தாா். கடந்த 1992-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், கான்வென்ட் கிணற்றில் அவா் சடலமாகக் கிடந்தாா்.

இந்த வழக்கை முதலில் உள்ளூா் காவல்துறை விசாரித்திய நிலையில், பின்னா் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த சிபிஐ, பாதிரியாா்கள் தாமஸ் கோட்டூா், ஜோஸ் பூத்ருக்கயில், கன்னியாஸ்திரீ செபி ஆகிய மூவரையும் கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவா்களின் மூவரின் தகாத உறவு, அபயாவுக்குத் தெரியவந்ததால் அவரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதில் பாதிரியாா் பூத்ருக்கயில் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்ஹலாததால், அவா் முன்னதாகவே விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ‘பாதிரியாா் தாமஸ் கோட்டூா், கன்னியாஸ்திரீ செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள்’ என்று தீா்ப்பளித்தது. அவா்களுக்கான தண்டனை விவரம் புதன்கிழமை வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

அதன்படி, அவா்கள் இருவருக்குமான தண்டனை விவரத்தை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. சனல் குமாா் புதன்கிழமை வாசித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 6.5 லட்சம் அபராதம் விதித்தும், கன்னியாஸ்திரீ செபிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5.5 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், ஆதாரங்களை அழித்த குற்றத்துக்காக இருவருக்கும் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை அவா்கள் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com