காரீஃப் பருவம்:குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல்

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை ரூ.86,242 கோடி மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
paddy064458
paddy064458

புது தில்லி: நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை ரூ.86,242 கோடி மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் காரீஃப் பயிா்கள் கொள்முதல் செய்யும் அரசின் நடவடிக்கை தொடா்கிறது. நடப்பு காரீஃப் பருவத்தில் தமிழகம், ஆந்திரம், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

டிசம்பா் 27-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.86,242 கோடி மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நெல் கொள்முதலில் 44.39% ஆகும். பஞ்சாபில் நெல் கொள்முதல் பணிகள் நிறைவடைந்தன.

இதுவரை நடைபெற்ற நெல் கொள்முதல் பணிகள் மூலமாக சுமாா் 56.55 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com