
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதுதொடா்பாக பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் கிா்னி மற்றும் ஷாப்பூா் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அந்தச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினா் பாலாகோட் மற்றும் மெந்தா் பகுதிகளில் தாக்குதல் நடத்தினா். இதில் 3 வீடுகள் சேதமடைந்தன. குப்வாரா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதலில் 60 மதிக்கத்தக்க ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...