
புது தில்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 'ஸ்ரீராம் ஜன்மபூமி திரத் ஷேத்ரா' என்ற அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளையை உருவாக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் என்று மோடி அறிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...