இந்திய அணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக அபராதம்: இந்த முறை 80 சதவீதம்

குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாத இந்திய அணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக அபராதம்: இந்த முறை 80 சதவீதம்


குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாத இந்திய அணிக்கு தொடர்ந்து 3-வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் ஹாமில்டனில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் 4 ஓவர்கள் குறைவாக வீசியதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தத் தவறை ஒப்புக்கொண்டதால் இதுகுறித்து முறையான விசாரணை நடத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது. 

முன்னதாக, நியூஸிலாந்துக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற 4-வது டி20 மற்றும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற 5-வது டி20 ஆட்டங்களிலும் மெதுவாகப் பந்துவீசியதால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து முறையே 40 மற்றும் 20 சதவீதத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com