
திருப்பதி
திருப்பதி: திருமலை திருப்பதியில் விரைவில் புதிய வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டு, நான்கு வழிச் சாலை மற்றும் இரு சக்கர வாகனங்களுக்குத் தனி வழி ஏற்படுத்தப்பட உள்ளது.
திருமலை திருப்பதியை போக்குவரத்து நெரிசலற்ற மற்றும் பக்தர்களுக்கு இட நெருக்கடி இல்லாத இடமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.4 கோடிச் செலவில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
தற்போதிருக்கும் சில பேருந்து நிறுத்தங்கள் அவுட்டர் ரிங் ரோடு பகுதிக்கு மாற்றவும், தற்போதிருக்கும் வரவேற்பு வளையத்தை இடித்துவிட்டு, 4 வழித்தடங்களைக் கொண்ட புதிய வரவேற்பு வளைவு உருவாக்கப்படவும் உள்ளது.
கட்டுமானப் பணிகள் நடைபெறும் வரை, போக்குவரத்தை சீர் செய்ய சுமார் 50 பேர் அப்பகுதியில் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளை முடிக்க 90 நாட்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பணிகள் நடக்கும் போது மற்றொரு பக்கம் போக்குவரத்துக்காக விடப்படும், ஒவ்வொரு நாளும் சுமார் 80 ஆயிரம் மக்கள் சராசரியாக கோயிலுக்கு வருகிறார்கள. அதிகமானோர் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் அதனைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...