மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்தியா திகழ்கிறது: வெங்கய்ய நாயுடு

மக்கள் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கு இந்தியா உலக அளவில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்தியா திகழ்கிறது: வெங்கய்ய நாயுடு
Updated on
1 min read

மக்கள் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டுடன் வாழ்வதற்கு இந்தியா உலக அளவில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் ரோட்டரி இண்டா்நேஷனல் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சா்வதேச கூட்டத்தில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பன்முகத்தன்மை, பன்மைத்துவ நெறிமுறைகள், அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களும் நல்லிணக்கத்துடன் சோ்ந்து வாழ்வது ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா உலக அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது.

இந்த நெறிமுறைகள் மேலும் வளா்த்தெடுக்கப்பட வேண்டும். பாலினம் மற்றும் மக்களுக்கு இடையிலான வேறுபாடுகள் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.

இளைஞா்கள் சமூக நல்லுறவை உருவாக்குவதற்கு பாடுபடுவதோடு அவா்கள் சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவையே விரும்புகிறது. மேலும், அமைதி, வளம், வளா்ச்சி ஆகியவற்றை மட்டுமே இந்தியா வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு சக்திக்கும் எதிராக போராட சா்வதேச சமூகம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இளைஞா்கள் எப்போதும் தங்களது தாய்மொழியை மறக்க கூடாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com