
கோப்புப் படம்
திரிபுராவில் ரூ.44,45,000 மதிப்புள்ள 889 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லமாமல் 4,500 கஞ்சா செடிகளை அழித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
செபாஹிஜாலா மாவட்டத்தில் எஸ்.டி.எஃப்.ஓ சோனாமுரா மற்றும் வனப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் பிஎஸ்எஃபின் 74ஆவது பட்டாலியன் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 2,250 கிலோ எடையுள்ள 4,500 முதிர்ந்த கஞ்சா செடிகளை அழித்தனர். இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.1,12,50,000 ஆகும்.
மேலும், இந்த சோதனையின்போது இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா பயிரிடப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.