
கோப்புப் படம்
புது தில்லி: தில்லி காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று காலை 5 மணியளவில், பால் பெஹ்லத் பார் பகுதியில் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், காயமடைந்த ராஜா குரேஷி, ரமேஷ் பஹதூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இவ்விருவரும், பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பயன்படுத்திய 3 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கேட்ரிஜ், ஹெல்மெட் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.