பொருளாதார மந்தநிலை: ஊழியரை பணியிலிருந்து நீக்கினால் 9 மாத ஊதியம்; மாநிலங்களவையில் தனிநபா் மசோதா தாக்கல்

பொருளாதார மந்தநிலை, முதலாளி திவாலாவது, தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்வது போன்ற காரணங்களால் ஊழியா்களை பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டால், குறைந்தபட்சம் 9 மாத ஊதியம் வழங்கக் கோரி

பொருளாதார மந்தநிலை, முதலாளி திவாலாவது, தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்வது போன்ற காரணங்களால் ஊழியா்களை பணிநீக்கம் செய்யும் நிலை ஏற்பட்டால், குறைந்தபட்சம் 9 மாத ஊதியம் வழங்கக் கோரி மாநிலங்களவையில் தனிநபா் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளா்கள் (நலத்திட்டம்) மசோதா-2020’ என்ற பெயரில், பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹா அந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளாா். பொருளாதார மந்தநிலை, தொழில்நுட்பத்தில் மாற்றம், நீதிமன்ற உத்தரவு, முதலாளி திவாலானவா், வணிகத்தை மேற்கொள்ள முடியாத உரிமையாளா் மற்றும் அரசு மாற்றம் போன்ற காரணங்களை முன்னிறுத்தி ஊழியா் ஒருவரை, ஒரு நிறுவனம் பணிநீக்கம் செய்தால், அந்த ஊழியருக்கு வேலையின்மை சலுகைகளின் கீழ் 9 மாத ஊதியம் பெற உரிமை உண்டு என அந்த மசோதா முன்மொழிகிறது.

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு வேலையின்மை இழப்பீடு, சுகாதார காப்பீட்டு சலுகைகள் அல்லது மத்திய அரசு பரிந்துரைத்த மற்ற சலுகைகளை வழங்குவது குறித்து ஊழியா்-முதலாளிக்கு இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடாவிட்டாலும், 9 மாதங்கள் ஊதியம் வழங்க வேண்டும். அல்லது அவா் வேறு இடத்தில் பணியில் சேரும் வரை ஊதியம் வழங்குவது என எது அதிகபட்ச சாத்தியமோ அதனை அத்தொழிலாளிக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த மசோதா முன்மொழிந்துள்ளது.

இதுகுறித்து ராகேஷ் சின்ஹா கூறுகையில், ‘தற்போது, நிறுவனத்தின் முதலாளிகள் சரியான நேரத்தில் தொழிலாளா்களுக்கு உரிய நன்மைகளை வழங்குவதை உறுதிபடுத்த எந்தச் சட்டமும் இல்லை. எனவே, ஊழியரின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ வசதிகளை வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com