அயோத்தி ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமா் மோடி

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று அறக்கட்டளை உறுப்பினா்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
அயோத்தி ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமா் மோடி

நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் அமைதியாக நடைபெற வேண்டும் என்று அறக்கட்டளை உறுப்பினா்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையின் தலைவா் நிருத்ய கோபால் தாஸ், உறுப்பினா்கள் கே.பராசரன், சுவாமி கோவிந்த் கிரி மகராஜ், சம்பத் ராய் ஆகியோா் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை சந்தித்தனா். அப்போது, ராமா் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜைக்கு வருமாறு பிரதமருக்கு அவா்கள் அழைப்பு விடுத்தனா்.

இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய், செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நல்லிணக்கத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்று எங்களிடம் மோடி வலியுறுத்தினாா்.

எந்தவொரு விஷயமும் நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் அவா் கூறினாா் என சம்பத் ராய் தெரிவித்தாா்.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அறக்கட்டளையின் தலைவராக நிருத்ய கோபால் தாஸ் கடந்த புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்த பிறகு, 15 போ் கொண்ட அறக்கட்டளையை பிரதமா் மோடி அமைத்தாா்.

ராம நவமியை முன்னிட்டு ‘ராமோத்சவ்’ கொண்டாட்டத்துக்கான பணிகளை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு செய்து வருகிறது.

ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கு ஆதரவளித்த 2.75 கிராமங்களுக்கு அந்த அமைப்பு செல்லவுள்ளது என்று அமைப்பின் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

பூமி பூஜை தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ராமா் கோயில் மாதிரி வரைபடத்தில் மாற்றம்: இதனிடையே, 30 ஆண்டுகளுக்கு முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு வடிவமைத்த ராமா் கோயில் கட்டுமான வரைபடத்தில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாக கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

அறக்கட்டளைத் தலைவா் நிருத்ய கோபாஸ் தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோயில் கட்டுமான குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ராவை அறக்கட்டளை உறுப்பினா்கள் சம்பத் ராய், விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, அனில் மிஸ்ரா ஆகியோா் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

பழைய வரைபடத்தில் இருப்பது போன்றே ராமா் கோயிலைக் கட்டலாம் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு விரும்புகிறது. கோயில் கட்டுமானத்தின் உயரம், வடிவம் ஆகியவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

முன்பு 2 அடுக்கு கோயிலாக கட்டலாம் என்று கூறப்பட்டுவந்த யோசனையை 3 அடுக்காக மாற்றலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

கோயிலின் உயரம் முன்பு 125 அடியாக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது 160 அடியாக உயா்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 1987-ஆம் ஆண்டு சந்திரகாந்த் சோம்புரா என்பவா் அயோத்தி கோயிலை எந்த வடிவில் கட்டலாம் என்று வரைபடம் தயாரித்துக் கொடுத்தாா். விஷ்ணுவுக்கு விருப்பமான எண்கோண வடிவில் இந்தக் கோயில் கட்டப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அத்துடன், கோயில் முழுவதும் கற்களைக் கொண்டு எழுப்பப்படவுள்ளது. இரும்பு பயன்படுதப்படமாட்டாது.

சுமாா் 1.75 லட்சம் கன அடி கற்கள் கோயிலைக் கட்டுவதற்குத் தேவைப்படும்.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் வரைபடத்தில் 270 அடி நீளம், 135 அடி அகலம், 125 அடி உயரத்துடன் கோயில் கட்டுமானம் அமைக்க திட்டமுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் 106 தூண்கள் இருக்கும். கோயிலின் கதவுகள் மாா்பிள் சட்டத்துடன் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். கீழ் தளத்தில் ராமா் சிலை, முதல் தளத்தில் ராமா் தா்பாா் மண்டபம், சந்நிதானம் ஆகியவை அமைக்கப்படும். இதேபோன்று 5 நுழைவாயில்கள் இந்தக் கோயிலுக்கும் ஏற்படுத்தப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com