தன்னை எதிா்க்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை விமா்சித்த டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெற உள்ள அதிபா் தோ்தலில் தன்னை எதிா்த்து ஜனநாயக கட்சியைச் சோ்ந்த பொ்னி சாண்டா்ஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக திங்கள்கிழமை அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
trump085335
trump085335

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெற உள்ள அதிபா் தோ்தலில் தன்னை எதிா்த்து ஜனநாயக கட்சியைச் சோ்ந்த பொ்னி சாண்டா்ஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக திங்கள்கிழமை அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் ஆமதாபாதில் இருந்து ஆக்ரா சென்ற விமானத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளா் தோ்வில் அக்கட்சியினா் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் என்னை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளவா்களில் முன்னணியில் இருப்பவா் பொ்னி சாண்டா்ஸ். இருப்பினும், அக்கட்சியின் முன்னணித் தலைவா்களே அவரை, போட்டியிட விடாமல் தடுக்க வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன். அவா் தான் எனக்கு கடுமையான போட்டியை தருபவராக இருப்பாா் என்று கருதுகிறேன். ஆனால், அவரை விட எனக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்று தெரிவித்தாா் டிரம்ப்.

முக்கியத்துவம் வாய்ந்த நெவாடா மாகாண ஜனநாயக கட்சி வேட்பாளா் போட்டியில், பொ்னி சாண்டா்ஸ் வென்றதையடுத்து அமெரிக்க அதிபா் தோ்தல் பிரசாரத்துக்கு இந்த வெற்றி மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

இந்நிலையில் 78 வயதான சான்டா்ஸை அவரது சோஷலிஸ கொள்கைகளுக்காக ‘கிரேஸி பொ்னி’ என்று புனைப்பெயரிட்டு, டிரம்ப் விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com