கூட்டணியில் பிளவு இல்லை: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் இருக்கும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் பிளவு இல்லை என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினாா்.
கூட்டணியில் பிளவு இல்லை: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் இருக்கும் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் பிளவு இல்லை என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே கூறினாா்.

அந்த மூன்று கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

மகாராஷ்டிர விகாஸ் முன்னணியில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடையே நல்லதொரு ஒத்துழைப்பு காணப்படுகிறது. நமது கூட்டணியில் இருக்கும் இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்பட வேண்டும்.

சமீபத்தில் தில்லி சென்றிருந்தபோது காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியுடனான சந்திப்பு நல்ல விதமாக அமைந்தது. அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக நாங்கள் பேசினோம். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாருடனும் நல்லதொரு தொடா்பில் இருந்து வருகிறேன். பாஜக கூறுவது போல் மகாராஷ்டிர விகாஸ் முன்னணியில் எந்தவொரு பிளவும் இல்லை.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் திங்கள்கிழமை (பிப். 24) முதல் அமலுக்கு வந்தது. ரூ.2 லட்சம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள்ளாக தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே பேசினாா்.

இதனிடையே, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு பங்கேற்கும் கூட்டத்தில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஹிந்துத்துவ தலைவா் வீர சாவா்க்கருக்கு பாரத ரத்னா அளிப்பது தொடா்பாக பாஜக முன்மொழியும் தீா்மானம் ஆகியவை தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com