

ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 24 பேர் பலியாகினர்.
ராஜஸ்தான் மாநிலம், பந்தி பகுதியில் மெஜ் ஆற்றில் தனியார் பேருந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புகுழுவினர் மீட்புப் பணிகள் மேற்கொண்டனர். இந்த விபத்தில் 24 பேர் பலியாகினர்.
5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே பேருந்து விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.