
jawed-ashraf044004
புது தில்லி: பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக ஜாவித் அஷ்ரஃப் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
1991-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் (இந்திய அயல்பணி) அதிகாரியான அஷ்ரஃப், தற்போது சிங்கப்பூருக்கான இந்திய தூதராக பணிபுரிந்து வருகிறாா். இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவு மேம்பட்டு வரும் நிலையில், அஷ்ரஃப் புதிய தூதராக பதவியேற்கவுள்ளாா். அவா் விரைவில் பதவியேற்பாா் என மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவத்ரா நேபாளத்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா்.