
புது தில்லி: தில்லி வன்முறையில் வீடுகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கு இந்து மக்கள் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா என்று நிரூபித்துள்ளனர்.
தில்லி வன்முறையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்ந்து வந்த பகுதிகளில் ஏராளமான வீடுகளும், கடைகளும் எரித்து தீக்கிரையாகின.
இதனால் சுமார் 40 முஸ்லிம் குடும்பம், வீடு மற்றும் உடைமைகளை இழந்து செய்வதறியாது நின்றனர். ஆனால், அவர்களுடன் அக்கம் பக்கத்தில் வசித்து வந்த இந்து மக்கள் தங்கள் வீட்டுக் கதவுகளை முஸ்லிம் மக்களுக்காக திறந்துவிட்டுள்ளனர். தில்லி வன்முறையில் வீடுகளை இழந்த ஏராளமான முஸ்லிம் மக்கள் இந்துக்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதன் மூலம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா என்பதை மக்கள் அனைவருமே மீண்டும் நிரூபித்துள்ளனர்.