மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் - மசோதா நிறைவேற்றம்

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் - மசோதா நிறைவேற்றம்

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயம் என்பதற்கான மசோதா மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

அமைச்சர் சுபாஷ் தேசாய், கீழ்சபையில் இந்த மசோதாவை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தினார். இது 2020-2021 கல்வியாண்டில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாய பாடமாக மாற்ற வகை செய்யும் மசோதாவாகும். 

அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு மாணவருக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு வகுப்பிற்கு இச்சட்டத்தின் சில விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவரான தேவேந்திர பட்னவீஸ் இதனை வரவேற்றாலும், விதிவிலக்கு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

மேலும், பள்ளிகள் இதனை கடைப்பிடிக்காத பட்சத்தில் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், ஒரு லட்ச ரூபாய் அபராதம் என்பது மிகவும் குறைவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

கவிஞரும், ஞான்பித் விருது வென்ற மறைந்த வி.வி.ஷிர்வாட்கரின் பிறந்த நாளான பிப்ரவரி 27 அன்று மராத்தி வளர்ச்சி நாளன்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com