
ரஞ்சித் சிங்
சண்டிகர்: வன்முறை என்பது வாழ்வின் ஒரு பகுதி என்ற ஹரியாணா மாநில கேபினட் அமைச்சர் ஒருவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு ஹரியானாவில் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் சிறைத்துறை அமைச்சராக கேபினட் அந்தஸ்தில் பதவி வகித்து வருபவர் ரஞ்சித் சிங். இவர் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிர்ஸா மாவட்டத்தில் உள்ள ராணியா தொகுதியில் இருந்து சுயேட்சையாகத் தேர்வு செய்யப்பட்ட இவர் , பின்னர் பாஜகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்
இந்நிலையில் வியாழனன்று மாநில சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தில்லி வன்முறைச் சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, 'கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அது கடந்த காலத்திலும் நடைபெற்றுள்ளது. இந்திரா காந்தி கொல்லப்பட்ட சமயத்தில், தில்லியே பற்றி எரிந்தது. வன்முறை என்பது வாழ்வின் ஒரு பகுதி' என்று பதிலளித்தார்.
இவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.